காங்கேயம் திருப்பூர் சாலையில் பைக்கில் சென்ற வாலிபர் நிலைதடுமாறி லாரி சக்கரத்தில் விழுந்து பலி. சிசிடிவி காட்சிகள் வைரல். விபத்து குறித்து காங்கேயம் காவல்துறை விசாரணை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் திருப்பூர் சாலையில் பைக்கில் சென்ற வாலிபர் நிலை தடுமாறி லாரி சக்கரத்தில் விழுந்து சம்பவ இடத்தில் பலியானார். சிசிடிவி காட்சிகள் வைரல். விபத்து குறித்து காங்கேயம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கேயம் திருப்பூர் சாலையில் வசித்து வருபவர் காதர் பாஷா வயது 27. இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காங்கேயம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர் சாலையில் காதர் பாஷா சென்று கொண்டிருந்தபோது அவருக்கு முன்னால் சென்ற கரூரில் இருந்து மேட்டுப்பாளையத்திற்க்கு சிமெண்ட் லோடு ஏற்றி வந்த 14 சக்கரங்கள் கொண்ட லாரியை இடதுபுறமாக முன்னேறிச் சொல்ல முயற்சி செய்கின்றார். அப்போது இவரது இருசக்கர வாகனமானது நிலை தடுமாறி கீழே விழுந்தது இதில் காதர் பாஷா லாரியின் சக்கரத்தில் விழுந்து விடுகின்றார். இதில் லாரி சக்கரங்கள் தலையில் ஏறி இறங்கியதால் தலை கசகசா என கசங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தினால் திருப்பூர் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காங்கேயம் காவல்துறை இறந்த காதர் பாஷாவின் உடலை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.