எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக பள்ளிகளில் பணியாற்றி வரும் சுமார் 12000 பகுதி நேர ஆசிரியர்களுக்கு தீபாவளிக்கு முன்பே ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பையும் தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.