நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரதான அருவியாக அகஸ்தியர் அருவி உள்ளது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றது. இந்த அருவிக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று அருவியில் காணப்பட்ட பிளாஸ்டிக், மது பாட்டில்களை வனத்துறையினர் அகற்றி சுத்தம் செய்தனர்.