விராலிமலை கோவிலில் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை!
பொது பிரச்சனைகள்
விராலிமலை முருகன் கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் மலைக்கோயில் பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகும். இந்நிலையில் மலையை சுற்றி கோயிலுக்குச் சொந்தமாக இருந்த நிலங்கள் தற்போது ஆக்கிரமிப்பாளர்களால் சுறுங்கி விட்டன. வனங்கள் சூழ்ந்த மலையாக இருந்த இக்கோயில் ஆக்கிரமிப்பு அதிகமானதால் வனங்கள் அழிந்து கட்டடங்கள்பெருகிவருகின்றன. இதனால் மயில்கள், குரங்கு உள்ளிட்டவை மலைகளை விட்டு வெளியேறி வருகிறது. வரலாற்று சிறப்பு மிக்க விராலிமலையை சுற்றி பசுமையை அழிக்கும் நோக்கில் மலைப்பகுதியை ஆக்கிரமிப்பது பக்தர்களிடையே வேதனை அளிப்பதாக உள்ளது. ஆகவே, இந்து சமய அறநிலையத்துறை இப்பிரச்னையில் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடத்தில் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் பக்தர்கள் கோரிக்ை விடுத்துள்ளனர்.