புஞ்சைபுளியம்பட்டியில் புறம்போக்கு நிலத்தில் வைக்கப்பட்ட சாமி சிலை அகற்றம்

புஞ்சைபுளியம்பட்டியில் புறம்போக்கு நிலத்தில் வைக்கப்பட்ட சாமி சிலை அகற்றம்

Update: 2024-10-24 08:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புஞ்சைபுளியம்பட்டியில் புறம்போக்கு நிலத்தில் வைக்கப்பட்ட சாமி சிலை அகற்றம் புஞ்சைபுளியம்பட்டி கணேசபுரம் பெரியார் நகர் செல்லும் வீதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஒரு தரப்பினர் பந்தல் அமைத்து, மண்ணால் செய்யப்பட்ட சாமி சிலையை வைத்து வழிபட்டனர். இதற்கு பொதுமக்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. அவர்கள் இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தநிலையில் பந்தல் அமைக்கப்பட்டு இருந்த இடத்துக்கு அருகிலேயே பொதுமக்கள் மற்றொரு பந்தல் அமைத்து அதில் விநாயகர் சிலையை அமைக்க ஏற்பாடு செய்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் இருதரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து, நீங்கள் பந்தல் அமைத்துள்ள இடம் அரசுக்கு சொந்தமானது. இங்கு ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்று எச்சரித்தனர். மேலும் 2 பந்தல்களை யும், சாமி சிலையையும் அகற்றினர். இதனால் அந்தபகுதியில் பகுதிய பரபரப்பு ஏற்பட்டது.

Similar News