திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிவன் கோவில் தெருவில் உள்ள ஆக்ஸ்போ பள்ளியில் பொதிகை எழுத்தாளர் கூட்டமைப்பின் சார்பில் நூல் திறனாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. எழுத்தாளர் தளவாய் மாடசாமி எழுதிய நெல்லை பழமொழிகள் எனும் நூலினை பேராசிரியர் பிரியதர்ஷினி திறனாய்வு செய்து பேசினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.