புகையிலையில்லா இளைய சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புகையிலையில்லா இளைய சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2024-10-29 06:13 GMT

புகையிலையில்லா இளைய சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவள்ளூர் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் புகையிலையில்லா இளைய சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த மாதம் 24 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் புகையிலை தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கலைவாணி பங்கேற்று பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இதில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு புகையிலை தடுப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணி கே.ஜி.கண்டிகை முக்கிய வீதிகள் வழியாக சென்றது. பேரணியில் மாணவர்கள், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு, புகையிலை இல்லா இளம் சமுதாயம் அமைப்போம் என்று தங்கள் கைகளில் பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட புகையிலை தடுப்பு அலுவலர் பவித்ரா, மாவட்ட நல கல்வியாளர் கணேசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முரளி, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News