ஜெகதாபி அருகே பல சுவற்றில் டூ வீலர் மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.
ஜெகதாபி அருகே பல சுவற்றில் டூ வீலர் மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.
ஜெகதாபி அருகே பல சுவற்றில் டூ வீலர் மோதி விபத்து. இளைஞர் படுகாயம். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள லந்தகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் வீரக்குமார் வயது 28. இவர் அக்டோபர் 31ஆம் தேதி இரவு 11 மணி அளவில், கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியில் இருந்து மணப்பாறை செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் ஜெகதாபி பகுதியில் உள்ள பாலம் அருகே வந்தபோது, டூவீலரை வேகமாக இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, பால சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த வீரக்குமாரை மீட்டு திருச்சியில் உள்ள எஸ் ஆர் எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த வீரக்குமாரின் மனைவி மஞ்சுளா வயது 24 என்பவர் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வீரக்குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியனை காவல்துறையினர்.