ஜேடர்பாளையம் அருகே காதல் தோல்வியால் வட மாநில இளைஞர் தூக்குப்போட்டு தற்கொலை.
ஜேடர்பாளையம் அருகே காதல் தோல்விகள் வட மாநில இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் போலீசார் விசாரணை.
பரமத்தி வேலூர்,நவ.2- சட்டீஸ்கர் மாநிலம் ரைகார் மாவட்டம் ஜுனாபாரா ஜல்டேகா பகுதியைச் சேர்ந்தவர் சத்தர்பாஸ்சிங சௌகான்( 29). அதே பகுதியைச் சேர்ந்த மிதுன் சௌக்கான் ஆகிய இருவரும் மற்றும் சிலரும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு பகுதியில் செயல்பட்டு வரும் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகையில் கூலி வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் மிதுன் சௌகான் காதல் தோல்வியால் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் அதிகாலை 2 மணியளவில் சத்தர்பாஸ் சிங் சௌகான் தனது செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்காக அவர்கள் தங்கி உள்ள சிமெண்ட் அட்டை வீட்டிற்குள் சென்றுள்ளார் . உள்ளே பார்த்தபோது மிதுன் சௌகான் விட்டதில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்தார் .அதைப் பார்த்த சத்தர்பாஸ் சிங் சௌகான் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை உரிமையாளர் தமிழரசுக்கு தகவல் தெரிவித்துள்ளார் .உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மிதுன் சௌகானை ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மிதுன் சௌகான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் சத்தர்பாஸ்சிங சௌகான் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் கதீஜாபேகம் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து மிதுன் சௌகான் இறந்ததற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.