நாமக்கல்லில் நடைபெற்ற கல்லறை திருவிழா திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்திரு தாமஸ் மாணிக்கம் மற்றும் திருத்தொண்டர் அஜித் குமார் இணைந்து காலையில் திருப்பள்ளி நிறைவேற்றி இறந்த ஆத்மாக்களுக்காக வேண்டிக் கொண்டனர்.
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள், இறந்துபோன தங்கள் உறவினர்களை வழிபடும் வகையில், நவம்பர் 2ம் தேதியை, 'கல்லறை' திருநாளாக கொண்டாடுகின்றனர். அன்றைய தினம், கல்லறைக்கு சென்று சுத்தம் செய்து, பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கின்றனர். தொடர்ந்து, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, இறந்த ஆத்மாக்கள் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக பிரார்த்தனையில் ஈடுபடுவர்.இதையொட்டி நாமக்கல்லில் உள்ள கிறிஸ்தவர்கள் இறந்த ஆத்மாக்களுக்காக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றாக இறந்தவர்களின் கல்லறைகளில் கூடி அவர்களின் ஆத்மா நித்திய நிலைப்பாட்டியடைய வேண்டிக் கொள்வார்கள் அதை பின்பற்றும் வகையில் இன்றைய நாளில் நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்திரு தாமஸ் மாணிக்கம் மற்றும் திருத்தொண்டர் அஜித் குமார் இணைந்து காலையில் திருப்பள்ளி நிறைவேற்றி இறந்த ஆத்மாக்களுக்காக வேண்டிக் கொண்டனர். மேலும், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட கல்லறைக்குச் சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் குடும்பங்களின் கல்லறையை மந்தரித்து அவர்களுக்காக வேண்டிக் கொண்டு ஆறுதல் ஆசீர் வழங்கப்பட்டது.