ராசிபுரம் கைலாசநாதர்க்கு புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிப்பு. ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பாளுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம்
ராசிபுரம் கைலாசநாதர்க்கு புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிப்பு. ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பாளுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில் இன்று கேதார கௌரி நோன்பு விரதத்தை முன்னிட்டு கைலாசநாதர்க்கு 50.ஆயிரம் ரூபாய் மதிப்புடைய புதிய நோட்டுகளை அலங்கரிக்கப்பட்டு மேலும் ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பாளுக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் கௌரி நோன்பு இருந்த பொதுமக்கள் ஏராளமானோர் அதிரசம், பழங்கள்,பூஜை பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து ஆலயத்தை சுற்றி வலம் வந்தனர். பின்னர் பொதுமக்கள் கொண்டு வந்த சீர்வரிசைகளை ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பாள் முன்பு வைத்து பூஜை செய்தனர். கௌரி நோன்பு இருந்த பொதுமக்கள் தரிசனம் செய்து விரதத்தை முடித்து சென்றனர். மேலும் கைலாசநாதருக்கு அலங்கரிக்க பட்ட ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தை ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் தொடர்ந்து பார்த்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.