தீபாவளிக்கு நாமக்கல்லில் சேகரமான 80 மெட்ரிக் டன் பட்டாசு குப்பை அகற்றம்!

நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள 39 வார்டுகளில் குவிந்த சுமார் 80 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டது.

Update: 2024-11-02 13:28 GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல்லில் போடப்பட்டிருந்த தற்காலிக கடைகள் மூலமாகவும் பொதுமக்கள் பட்டாசு வெடித்ததாலும் ஆங்காங்கே தேங்கிய டன் கணக்கிலான குப்பைகளை அகற்றும் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான நாமக்கல் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளில் நாமக்கல்லில் முக்கிய சாலையில் தற்காலிக கடைகள் மற்றும் தரைக்கடைகள் உட்பட பல்வேறு கடைகளில் இருந்து வீசப்பட்ட பாலித்தீன் உறைகள், பாலித்தீன் பைகள், காகிதங்கள் மற்றும் தீபாவளி பண்டிகை நாளில் வீசப்பட்ட பட்டாசு மற்றும் இனிப்பு காலிப்பெட்டிகள், வெடி காகிதங்கள், வாழை இலைகள், சாலையோர உணவுக் கடைகளில் இருந்து கொட்டப்பட்ட உணவுக் கழிவுகள் என, மொத்தத்தில் நாமக்கல் மாநகரில் மட்டும் சுமார் 80 மெட்ரிக் டன் குப்பைகள் தேங்கியதை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் விரைந்து அகற்றினர். இதுகுறித்து நாமக்கல் மாநகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி நம்மிடம் கூறியதாவது... தீபாவளியை ஒட்டி நாமக்கல் மாநகராட்சி பகுதியில் உள்ள 39 வார்டுகளில் குவிந்த சுமார் 80 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டது. இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Similar News