மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தடை செய்து வாக்கு சீட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று கேட்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணம் செய்வதாக மதுரை வக்கீல் நந்தினியின் தந்தை ஆனந்தனும் குணாவும் அறிவித்திருந்தனர். கடந்த ஐந்தாம் தேதி நந்தினியின் தந்தை ஆனந்த், குணா ஆகியோருடன் நடை பயணம் நடப்பதாக முதலில் அறிவித்திருந்த நிலையில், ஆனந்த் உடல்நிலை குறைவு காரணமாக நடை பயணம் பங்கேற்க இயலவில்லை. மேலும் நடை பயணம் நவம்பர் 7ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் அவரது நடை பயணம் இன்று காலை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் பகுதியில் இருந்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கன்னியாகுமரி போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அவரது பயணத்திற்கு அனுமதியில்லை என்று கூறி நந்தினி மற்றும் குணாவை கன்னியாகுமரி போலீசார் கைது செய்தனர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.