புகழூரில்,அருள்மிகு சித்தி விநாயகர் பகவதி அம்மன் முனியப்ப சுவாமி ஆலய குடமுழுக்கு விழா நடைபெற்றது.
புகழூரில்,அருள்மிகு சித்தி விநாயகர் பகவதி அம்மன் முனியப்ப சுவாமி ஆலய குடமுழுக்கு விழா நடைபெற்றது.
புகழூரில்,அருள்மிகு சித்தி விநாயகர் பகவதி அம்மன் முனியப்ப சுவாமி ஆலய குடமுழுக்கு விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், புன்செய் புகழூர் வட்டம், ஹை ஸ்கூல் மேட்டில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு சித்தி விநாயகர் பகவதி அம்மன் முனியப்ப சுவாமி ஆலயம் புதுப்பிக்கப்பட்டு இன்று மகா குடமுழுக்க விழா நடைபெற்றது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு இன்று காலை மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து யாக பூஜையில் வேத பாராணயம்,மூல மந்திர ஹோமம், நாடி சந்தனம் , மஹா பூரணாகுதி, தீபாரதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தச தானம், கடம் புறப்பாடு நடைபெற்று, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கலசத்தில் ஊற்றி குடமுழுக்கு விழாவை நடத்தினர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மெஞ்சனூர் இளங்கோ, புகழூர் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஹைஸ்கூல்மேடு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஊர் பெரிய மூப்பன் கி.சதீஷ்குமார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மூர்த்தி லட்சுமணன் சண்முகவேல் மாரியப்பன் ரவி இளைஞர்கள் தலைமையிலான குடமுழுக்கு விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சசெய்திருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாத பையும்,அன்னதானம் வழங்கப்பட்டது.