நாமக்கல்லில் தேசிய சட்ட சேவை நாள் விழிப்புணர்வு பேரணி!

நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் தேசிய சட்டப் பணிகள் தின பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி துவக்கி வைத்தார்.

Update: 2024-11-08 10:07 GMT
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்-9 ஆம் தேதி சட்டப்பணிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் தேசிய சட்டப் பணிகள் தின பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி துவக்கி வைத்தார்.
தேசிய சட்ட சேவை தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் நடைபெற்ற பேரணியில், நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் கலந்துகொண்டனர்.தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்திரவின்படி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் சார்பில், நாமக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய சட்ட சேவை தின விழா நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குருமூர்த்தி, நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தேசிய சட்ட சேவை தின விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். வக்கீல் சாஜ் மற்றும், நாமக்கல் அரசு சட்டக்கல்லூரியில் படிக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பேரணியில் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.நிகழ்ச்சியில் விரைவு மகிளா கோர்ட் நீதிபதி முனுசாமி, கூடுதல் மாவட்ட நீதிபதி பிரபாசந்திரன், குடும்பநல கோர்ட் நீதிபதி பாலகுமார், சிஜேஎம் கோர்ட் நீதிபதி விஜயகுமார், தலைமை சார்பு நீதிபதி விஜய்கார்த்திக், கூடுதல் சார்பு நீதிபதி கண்ணன்,மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய நீதிபதி தங்கமணி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரவீனா, கூடுதல் மகிளா கோர்ட் நீதிபதி சுகன்யா உள்ளிட்ட நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

Similar News