சிங்களாந்தபுரம்: தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆர்.எஸ். ராஜக்கண்ணப்பன்.

மாண்புமிகு பால்வளத்துறை மற்றும் கதர் வாரிய கிராமத் தொழில்துறை அமைச்சர் . ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் நாமக்கல் மாவட்டம், சிங்களாந்தபுரம், தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையத்தில் ஆய்வு.

Update: 2024-11-08 18:30 GMT
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், சிங்களாந்தபுரம் தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையத்தில் இன்று பால்வளத்துறை மற்றும் கதர் வாரிய கிராமத் தொழில்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ , பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் , நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் , நிர்வாக இயக்குநர் (தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், சென்னை) டாக்டர் எஸ்.வினித் , மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பால்வளத்துறை மற்றும் கதர் வாரிய கிராமத் தொழில்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் இராசிபுரம் வட்டம், சிங்களாந்தபுரம் தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரம், பால் குளிரூட்டும் நிலையத்தின் மொத்த கொள்ளளவு, தினசரி கொள்முதல் செய்யப்படும் பாலின் விபரம் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு தேவையான கடன் உதவிகள், நிலுவையின்றி பண பட்டுவாடா மேற்கொள்ளுதல், பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடை தீவனம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் தடையின்றி உடனுக்குடன் வழங்கிட அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது இராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.பி.ஜெகநாதன், ஆவின் பொது மேலாளர் டாக்டர்.ஆர்.சண்முகம், துணை பதிவாளர் (பால்வளம்) சண்முக நதி, உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News