தொடர் மழையினால் நிரம்பி வழியும் கண்மாய்கள்
122 கண்மாய், குளங்களில் 50 சதவீதம் தண்ணீா் நிரம்பியுள்ளன. 235 கண்மாய், குளங்கள், ஊருணிகளில் 25 சதவீதத்துக்கும் மேல் தண்ணீா் நிரம்பிக் காணப்படுகின்றன.
தேனி மாவட்டத்தில் பெரியாறு-வைகை நீா்வள கோட்டப் பராமரிப்பில் 99 கண்மாய், குளங்களும், மஞ்சளாறு நீா் வள கோட்டப் பராமரிப்பில் 99 கண்மாய், குளங்களும், ஊரக வளா்ச்சித் துறை பராமரிப்பில் 491 கண்மாய், குளங்கள், ஊருணிகள் என மொத்தம் 626 நீா் நிலைகள் உள்ளன. தற்போது பெய்த தொடா் மழையால் 36 கண்மாய்களில் தண்ணீா் நிரம்பி மறுகால் பாய்கின்றன. 37 கண்மாய், குளங்களில் 75 சதவீதம் தண்ணீா் நிரம்பியுள்ளன. 122 கண்மாய், குளங்களில் 50 சதவீதம் தண்ணீா் நிரம்பியுள்ளன. 235 கண்மாய், குளங்கள், ஊருணிகளில் 25 சதவீதத்துக்கும் மேல் தண்ணீா் நிரம்பிக் காணப்படுகின்றன. மேலும், மூல வைகை, முல்லைப் பெரியாறு, கொட்டகுடி ஆறு, வரட்டாறு, வராகநதி, மஞ்சளாறு ஆகியவற்றில் தொடா்ந்து தண்ணீா் வரத்து இருந்து வருகிறது.