மத நல்லிணக்கத்தை கெடுப்பதாக கூறி அமரன் படத்தை தடை செய்ய போராட்டம்

சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து மதநல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாக உருவாக்கப்பட்ட அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக, மயிலாடுதுறை மாவட்ட தலைவர் முஹம்மது ரஃபி தலைமையில் மயிலாடுதுறையில் விஜயா திரையரங்கம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது

Update: 2024-11-08 15:27 GMT
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை விஜயா திரையரங்கில் அமரன் திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டுள்ளது. இந்நிலையில் அமரன் திரைப்படம் சிறுபான்மை இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை விதைக்கும் வகையில் உள்ளதாகவும் நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் விஜயா திரையரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ரஃபீக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அக்கட்சியினர் கலந்து கொண்டு அமரன் திரைப்படத்தை கண்டித்தும் அமரன் திரைப்படத்தை பார்த்து பாராட்டிய தமிழக முதலமைச்சரை கண்டித்தும், ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்களைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். ஏடிஎஸ்பி சிவசங்கர் தலைமையில் திரையரங்கு சாலையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Similar News