பிலிக்கல்பாளையம் வெல்லம் ஏலம் மார்க்கெட்டில் வெல்லம் விலை வீழ்ச்சி.
பிலிக்கல்பாளையம் வெல்லம் ஏலம் மார்க்கெட்டில் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
பரமத்தி வேலூர், நவ..8- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், கபிலர் மலை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்கின்றனர். பதிவு செய்யாத விவசாயிகள் விளைந்த கரும்புகளை கபிலர்மலை சுற்று வட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் 200-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் கரும்பு ஆலை உரிமையாளர்களுக்கு தன் ஒன்றுக்குரூ 3600 வரை விற்பனை செய்து வருகின்றனர்.வாங்கிய கரும்புச்சாறுகளில் பாகு தயாரித்து அதில் இருந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர். பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, பிலிக்கல்பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏல சந்தைக்கு கொண்டு வருகின்றனர். வெல்லத்தை ஏலம் எடுப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வெல்லத்தை ஏலம் எடுத்து தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா ,கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்ராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,340-க்கும், அச்சு வெல்லம் சிலம்பம் ஒன்று ரூ.1,340 -க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,250-க்கும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று1,300-க்கும் ஏலம் போனது. தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் வெல்லம் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.