ரெகுநாதபுரத்தில் சரவணன் என்பவர் அரசு கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரி அருகே நேற்று அசோக் லேலண்ட் டிப்பர் லாரி ஓட்டிக் கொண்டு வந்தார். அப்பொழுது வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் லாரியை பிடித்து சோதனை செய்ததில் ஆறு யூனிட் சரளை மண் கடத்திக் கொண்டு வந்ததை கண்டுபிடித்தனர். இது குறித்து தீவிர விசாரணை செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தும் சரவணனை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.