இராசிபுரம் மக்கள் நல குழுவின் பொறுப்பாளர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.!

மக்கள் நலனுக்கு எதிரான பேருந்து நிலைய திட்டத்தை தடுக்க வேண்டுமென்றும், நீர்வழிப்பாதைகளை பாதுக்காக்க வேண்டுமெனவும் இராசிபுரம் மக்கள் நலக்குழு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Update: 2024-11-11 12:57 GMT
இராசிபுரம் மக்கள் நல குழுவின் பொறுப்பாளர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் அதில் கூறியிருப்பதாவது... 2022 ஆம் ஆண்டு பெய்த கன மழையில் அணைப்பாளையம் மற்றும் சந்திரசேகரபுரம் கிராமங்கள் நீரில் முழ்கியது அப்பகுதியில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மனைப்பிரிவுகளுக்காக நீர்வழிப்பாதையை அடைத்ததனால் மேற்படி கிராம மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததில் நீதியரசர்கள் அளித்த தீர்ப்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கான வழிகாட்டு குறிப்புகளை அறிந்து
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசீலித்து தொடக்க நிலையிலேயே இந்த மக்கள் நலனுக்கு எதிரான பேருந்து நிலைய திட்டத்தை தடுக்க வேண்டுமென்றும், நீர்வழிப்பாதைகளை பாதுக்காக்க வேண்டுமெனவும் இராசிபுரம் மக்கள் நலக்குழு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் குழுவின் தலைவர் வெ.பாலு (எ)பாலசுப்ரமணி, கெளரவத்தலைவர் ஜெ.ஜெயபிரகாஷ், செயலாளர் நல்வினை செல்வன்,பொருளாளர் கா.முருகன்,ஆகியோர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

Similar News