பரமத்தி வேலூரில் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி இருவர் கைது.
பரமத்திவேலூரில் வங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இருவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பரமத்திவேலூர், நவ.13: நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல வங்கி ஒன்றின் போலி ஆவணங்களை கொண்டு பரமத்திவேலூர் பகுதி மக்களிடம் வங்கி கடன் பெற்று தருவதாக கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த இருவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்த தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள கள்ளிப்பாளையம் மீனாட்சி பாளையம் கருக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதி மக்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினரிடம், தாங்கள் நாமக்கல்லை அடுத்துள்ள நல்லிபாளையத்தில் செயல்பட்டு வரும் பிரபல வங்கி ஒன்றின் பணியாளர் ஊழியர்கள் எனவும் தங்கள் வங்கியில் சிறப்பு திட்டங்கள் மூலம் கிராமப் பகுதி மக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு வருவதாகவும் அதற்காக ஆயிரம் ரூபாய் செலுத்தி தங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் எனவும் கூறி மக்களிடம் ஆவணங்களைப் பெற்று வங்கிக் கணக்கு தொடங்குவதற்கான பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சந்தேகம் அடைந்த சிலர் சம்பந்தப்பட்ட வங்கி கிளை மேலாளருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு சிறப்பு கடன் திட்டங்கள் குறித்து விசாரித்தும் அதற்காக வங்கி பணியாளர்கள் என்ற பெயரில் இருவர் பொதுமக்களிடம் வங்கி கணக்கு தொடங்க தேவையான ஆவணங்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் வசூலித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தனர் இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வங்கி மேலாளர் வினோத்குமார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார் அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதில் தெரிவித்ததை அடுத்து பொதுமக்களின் உதவியுடன் அவர்களை பரமத்திவேலூர் போலீசில் ஒப்படைத்தனர். அங்கு காவல் ஆய்வாளர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் சேலம் கட்சி பாளையம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் ராமச்சந்திரன்(36), ஜான்சன் பேட்டியைச் சேர்ந்த ஆனந்தன் மகன் பிச்சைமுத்து (26) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்து 2500 ரூபாய் ரொக்க பணம், இரண்டு செல்போன்கள் இருசக்கர வாகனம் மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி சார்ந்த போலி விண்ணப்பங்கள், மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து வங்கி மேலாளர் வினோத்குமார் கொடுத்த புகாரியின் அடிப்படையில் அவர்கள் இருவரும் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல வங்கியின் பெயரை கூறி, போலி ஆவணங்கள் மூலம் பொதுமக்களிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.