பூலாம்வலசு - நடந்து சென்ற வாலிபர் மீது லாரி மோதி விபத்து. விஏஓ புகார்.
பூலாம்வலசு - நடந்து சென்ற வாலிபர் மீது லாரி மோதி விபத்து. விஏஓ புகார்.
பூலாம்வலசு - நடந்து சென்ற வாலிபர் மீது லாரி மோதி விபத்து. விஏஓ புகார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பூலாம்வலசு, விநாயகர் கோவில் அருகே நவம்பர் 12ஆம் தேதி காலை 11:15 மணியளவில், அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் மாவட்டம்,புகலூர் தாலுகா, முன்னூர் பகுதியைச் சேர்ந்த துரைசாமி வயது 46 என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி, நடந்து சென்ற அடையாளம் தெரியாத நபர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த நபருக்கு முகம் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த புங்கம்பாடி மேல் பாகம் கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி வயது 50 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், லாரியை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய துரைசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.