தொட்டியபட்டி-குழந்தைகள் தினம்- ஆட்சியரின் வாழ்த்து மடலை வாசித்த தலைமை ஆசிரியர்.
தொட்டியபட்டி-குழந்தைகள் தினம்- ஆட்சியரின் வாழ்த்து மடலை வாசித்த தலைமை ஆசிரியர் மூர்த்தி.
தொட்டியபட்டி-குழந்தைகள் தினம்- ஆட்சியரின் வாழ்த்து மடலை வாசித்த தலைமை ஆசிரியர் மூர்த்தி. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கரூர் மாவட்ட ஆட்சியரின் குழந்தைகள் தின வாழ்த்து மடலை வாசித்த தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர். கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, மொஞ்சனூர் கிராமத்தில் உள்ள தொட்டியப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் மூர்த்தி. பள்ளியின் புரவலர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் துணையோடு தனியார் பள்ளிக்கு நிகராக தொடர்ந்து அரசு பள்ளியை நடத்தி வரும் தலைமை ஆசிரியர், அவ்வப்போது மாணாக்கர்களுக்கு தேவையான விழிப்புணர்வுகளையும், அரசின் வழிகாட்டுதல்களையும் மாணாக்கர்களுக்கு புரியும் வகையில் செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாகும். தமிழக அரசு குழந்தைகள் தினத்தை விழிப்புணர்வு தினமாக கொண்டாட ஆலோசனை வழங்கி செயல்படுத்தி உள்ளது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பள்ளி மாணவர்கள் அனுப்பிய வாழ்த்து மடலில், நான் உங்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசுகிறேன் என்று ஆரம்பித்து, குழந்தைகளின் உரிமை மற்றும் சைல்டு ஹெல்ப்லைன் எண் உள்ளிட்ட செய்தியோடு, போதை எனக்கு வேண்டாம். நமக்கும் வேண்டாம் என்றும், கரூர் மாவட்டத்தை குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நலமிக்க மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்று தனது வாழ்த்து மடலின் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு அனுப்பினார். இன்று அந்த வாழ்த்து மடலை பள்ளி வளாகத்தில் மாணாக்கர்கள் முன்பு தலைமையாசிரியர் மூர்த்தி வாசித்து காட்டினர். வாழ்த்துச் செய்தியை செவிமடுத்த மாணாக்கர்கள் நிகழ்ச்சியில் நிறைவில் கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவித்தனர்.