குப்ப கவுண்டன்வலசில் மது போதையில் ஏற்பட்ட குடும்ப தகராறில் தலையிட்ட தந்தை மகனை தாக்கிய மூவர் கைது.
குப்ப கவுண்டன்வலசில் மது போதையில் ஏற்பட்ட குடும்ப தகராறில் தலையிட்ட தந்தை மகனை தாக்கிய மூவர் கைது.
குப்ப கவுண்டன்வலசில் மது போதையில் ஏற்பட்ட குடும்ப தகராறில் தலையிட்ட தந்தை மகனை தாக்கிய மூவர் கைது. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, அஞ்சூர் கிராமம் குப்பகவுண்டன் வலசு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி வயது 48. இவரது மகன் மூர்த்தி குமார் வயது 29. இதே போல அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி 46, சாமியாத்தாள் 45 தம்பதிகள்.இவர்களது மகன்கள் தினேஷ் வயது 25, அரவிந்த் வயது 24.இரு தரப்பினரும் உறவினர்கள். இந்நிலையில் நவம்பர் 11ஆம் தேதி இரவு 8 மணி அளவில் பாலசுப்பிரமணி தனது வீட்டில் மது போதையில் குடும்ப உறுப்பினர்களிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த ராமசாமி மற்றும் மூர்த்தி குமார் இதில் தலையிட்டு தகராறை விலக்க முயன்றனர். இதனால் கோபமடைந்த பாலசுப்பிரமணி மற்றும் அவரது மகன்கள் அரவிந்த், தினேஷ், மனைவி சாமியாத்தாள் ஆகியோர், ராமசாமி மற்றும் மூர்த்தி குமாரை தகாத வார்த்தை பேசி, கைகளால் தாக்கி தடியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த ராமசாமி, மூர்த்தி குமார் ஆகியோர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், சம்பவம் தொடர்பாக மூர்த்திக்குமார் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இது தொடர்பாக தினேஷ் அரவிந்த் பாலசுப்பிரமணி ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நவம்பர் 27ஆம் தேதி வரை சிறையில் அடைத்தனர் தென்னிலை காவல் துறையினர்.