பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை மற்றும் திறப்பு விழா
குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பங்கேற்பு
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் பொய்யாமணி, குமாரமங்கலம், இராஜேந்திரம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பயணிகள் காத்திருப்போர் கூடம், மேல்நிலை நீர் தேக்க தொட்டி, குடிநீர் இணைப்பு வழங்குதல், சிமெண்ட் சாலைகள் மற்றும் தார் சாலைகளுக்கு ரூ.93.44 லட்சம் மதிப்பீட்டிலான அடிக்கல் நாட்டு விழா மற்றும் திறப்பு விழா நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றது. குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். திமுக மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி, திமுக குளித்தலை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.