கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை கிண்டி மருத்துவமனை மருத்துவர் பாலாஜி என்பவரை கத்தியால் குத்தி சிகிச்சை பெற்று வருகிறார் மருத்துவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்ற கருத்தை வலியுறுத்தியும் பாலாஜிக்கு உரிய நியாயம் கிடைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் முன்பாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் முன்பாக மருத்துவர் அருள் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர் மருத்துவர் பாலாஜிக்கு உரிய நியாயம் கிடைக்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது இது குறித்து மருத்துவர் அருள் கூறும் போது மருத்துவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாலாஜி என்ற மருத்துவர் கிண்டி மருத்துவமனையில் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் கேன்சருக்கு உரிய சிகிச்சை அளித்தும் நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்களை தாக்குவது தொடர்கதை யாகி வருகிறது எனவே மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் மருத்துவர் பாலாஜிக்கு உரிய நியாயம் கிடைக்க வலியுறுத்தியும் நாங்கள் கர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினார் இந்த போராட்டத்தில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்