ராமேஸ்வரப்பட்டியில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது

ராமேஸ்வரப்பட்டியில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது

Update: 2024-11-14 08:29 GMT
ராமேஸ்வரப்பட்டியில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா, ராமேஸ்வர பட்டி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தை புனரமைத்து இன்று மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மேலும் ,கோவிலில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர், ஸ்ரீ வெங்கட் அம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க பூஜிக்கப்பட்ட புனித நீரை எடுத்துச் சென்று கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்தில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். இதனைத் தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாதாரணையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள், குழந்தைகள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கும்பாபிஷேக விழா கமிட்டியின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News