ஒரே நாளில் மூன்று கோவில்கள் கும்பாபிஷேகம்
ஒரே நாளில் மூன்று கோவில்கள் கும்பாபிஷேகம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் அருள்மிகு அர்த்தநாரிஸ்வரர் திருக்கோயிலின் உப கோயில்களான அருள்மிகு ஆபத்து காத்த விநாயகர், அருள்மிகு தேரடி விநாயகர், அருள்மிகு மலை காவலர் சுவாமி திருக்கோவில்கள் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் காலை 7.31 மணி முதல் 8 மணிக்குள்ளும், எட்டு மணிக்கு மேல் 8:30 மணிக்குள் திருத்தேரடி விநாயகர் பெருமாளுக்கும், காலை 10:45 முதல் 11.30 மணிக்குள்மலைக்காவலர் கோவிலுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த திங்கட்கிழமை தொடங்கி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இன்று அனைத்து கோவில்களிலும் நான்காம் கால யாகபூஜைகள் நடத்தப்பட்டு பூர்ணாகுதிக்கு பின் தீர்த்த கலசங்களை சிவாச்சாரங்கள் எடுத்து வந்து கோவில் கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்,நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ரமணி காந்தன், கண்காணிப்பாளர் சுரேஷ், அறங்காவலர்கள் கார்த்திகேயன், அர்ஜுனன், அருணாசங்கர், பிரபாகரன்,நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபுநாமக்கல் மேற்கு மாவட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி செயலாளர் ராயல் செந்தில் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு மகிழ்ந்தனர் கும்பாபிஷேக நிகழ்ச்சியை ஒட்டி 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.கும்பாபிஷேக விழாவை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது முக்கிய வீதிகளில் கனரக வாகனங்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை போலீஸ் தரப்பிலும் தீயணைப்பு துறை நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.