அனைவருக்கும் கல்வி! தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு டிரினிடி கல்லூரியில் அரங்கேறிய சிறப்பு நிகழ்ச்சி.

நாமக்கல்லில் மோகனூர் சாலையில் உள்ள டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தேசிய கல்வி தினத்தினை முன்னிட்டு அனைவருக்கும் கல்வி என்ற தலைப்பில் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

Update: 2024-11-11 13:48 GMT
நாமக்கல் - டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய கல்வி தினத்தினை முன்னிட்டு "அனைவருக்கும் கல்வி" என்ற தலைப்பிலான நிகழ்ச்சி இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி மந்திரி மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த நாளை முன்னிட்டு இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரியின் துணை முதல்வர் ஆர் நவமணி மாணவிகளிடையே உரையாற்றினார். ஆசாத், கிராமப் புற ஏழைகள், சிறுமிகள் கல்வி கற்க வலியுறுத்தியதுடன், குறைந்தபட்ச அடிப்படை கல்வியையாவது பெறுவது அவர்கள் உரிமை என்றார். இவருடைய முயற்சியின் காரணமாக 1951-ல் மேற்கு வங்க மாநிலத்தில் கோரக்பூரில் முதல் ஐஐடி துவங்கப்பட்டது என்றார். மேலும், இந்நிகழ்வில் ஆசாத் பற்றிய 10 நிமிட ஆவணத் திரைப்படம் மாணவிகளுக்கு திரையிடப்பட்டது. கல்லூரியின் புத்தாக்க மையம், உள் தர மதிப்பீட்டு மையம் & உன்னத் பாரத் அபியான் அமைப்பு ஆகியவை இணைந்து இந்நிகழ்வினை நடத்தின. இறுதியாக கல்லூரி புத்தாக்க மைய ஒருங்கிணைப்பாளர் ஏ. விஜயசாரதி நன்றியுரை ஆற்றினார்.

Similar News