ஆலங்குடி பாரதிதாசன் சாலையை சேர்ந்த பிரியதரன் (40). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்தவர் திடீரென காணவில்லை என்று அவரது தாய் விஜயகுமாரி (60) அளித்த புகாரின் அடிப்படையில் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன நபரை தேடி வருகின்றனர்.