அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நேற்று காலை சூதாட்டம் நடைபெறுவதாக அறந்தாங்கி எஸ்ஐ சூரிய பிரகாசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்த அசாருதீன், அப்துல் ரகுமான், ஜான் பிரவீன் அஜய், சாகுல் ஹமீது, பகுருதீன், பரமசிவம் ஆகிய 6 பேரை கைது செய்து ₹870 ரொக்கம், 52 சீட்டு அட்டையை பறிமுதல் செய்தனர். இதில் பரமசிவத்தை தவிர மற்ற அனைவரும் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.