சிவன்மலையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நவீன பயனியர் நிழற்குடை - அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

காங்கேயம் சிவன்மலை ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பில் மாவட்ட ஊராட்சி 5வது வார்டு உறுப்பினர் கே.கே. சக்திவேல் பரிந்துரையில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் காங்கேயம் ஒன்றிய செயலாளர் என்.எஸ்.என். நடராஜ் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்

Update: 2024-12-03 13:14 GMT
காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருக்கோவிலுக்கு அமாவாசை, பௌர்ணமி, சஷ்டி, கிருத்திகை  மற்றும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். மலையின் அடிவாரத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று கொண்டு அவதிப்பட்டு வந்த நிலையில், இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி இடம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மாவட்ட ஊராட்சி 5வது வார்டு உறுப்பினர் கே.கே சக்திவேல் பரிந்துரையில் ரூ.15 லட்சத்தில் கடந்த 3 மாதங்களாக இந்த நிழற்குடை கட்டப்பட்டு வந்தது. சுமார் 35-க்கும் மேற்பட்ட நபர்கள் அமரும் வகையிலும் சாதாரண படிக்கட்டுகள் மற்றும் ஊனமுற்றவர்கள் ஏறும் வசதிக்கு சாய் தல அமைத்து முழுவதும் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு, மின்னொளி, சிசிடிவி கேமரா ஆகியவையும் பொருத்தப்பட்டு பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர் என் எஸ் என் நடராஜ் தலைமையில ரிப்பன் வெட்டி திறப்பு விழா நடைபெற்று பயணிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட ஊராட்சி 5வது வார்டு உறுப்பினர் கே கே சக்திவேல், அதிமுக மாவட்டத் துணை செயலாளர் லட்சுமி சோமசுந்தரம், சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி, கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பழனிச்சாமி,காங்கேயம் நகராட்சி 9வது வார்டு உறுப்பினர் துரைசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Similar News