ராசிபுரம் அருகே மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்து சேதம்...
ராசிபுரம் அருகே மழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்து சேதம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சிக்குட்பட்ட புதூர்மலையம்பட்டி பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் ஆறுமுகம்(78) இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் சாரல் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக அவரது வீட்டின் சுற்றுச்சுவர் அதிகாலை 5 மணி அளவில் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. திடீரென்று சுவர் இடிந்து விழுந்த சத்தத்தை கேட்டு குடும்பத்தினர் எழுந்தனர்.வீட்டிலிருந்த யாரும் எவ்வித காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.