பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் கேசரப்பட்டி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பதாக பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதிக்குச் சென்ற போலீசார் பெரிய சுப்பையா (38) என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை நடத்தியதில் விமல் 180 பாக்கெட், வி-1 150 பாக்கெட், கைப்பற்றினர். பின்னர் பெரிய சுப்பையா என்பவரை கைது செய்தனர்.