புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

புயல் பாதிப்படைந்த பொது மக்களுக்கு உதவும் பொருட்டு நிவாரணம் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது

Update: 2024-12-04 13:34 GMT
கடந்த ஒரு வார காலமாக  பெஞ்சல் புயல் காரணமாக கன மழையால் பாதிக்கப்பட்ட தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களுக்கு உதவும் பொருட்டு நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணியை நடைபெற்ற வருகிறது. இதன் ஒரு பகுதியாக  சுமார் ரூ.5,00,000 லட்சம் மதிப்பில்  நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கும் நிகழ்வானது ஆவரங்காடு நகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. நகர மன்ற தலைவர்,  மோ.செல்வராஜ்,  நகர மன்றத் துணைத் தலைவர் ப.பாலமுருகன் நகராட்சி ஆணையாளர் வி.தயாளன் ஆகியோர் நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனத்தை  அனுப்பி வைத்தனர். மேலும் நகராட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கிய தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு நகராட்சி சார்பாக நன்றிகளை தெரிவித்து கொண்டனர். மேலும் திமுக வார்டு கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள் ,  ஆகியோர் உடன் இருந்தனர்.....

Similar News