பொன்னமராவதி அருகே உள்ள கருப்புக்குடிப்பட்டியில் குட்கா விற்கப்படுவதாக சிறப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் கருப்புக்குடிப்பட்டியில் சோதனை செய்தபோது அங்கு உள்ள பெட்டிக்கடையில் குட்கா வைப்பது தெரியவந்தது. இதனையடுத்து கருப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.