ஜோலார்பேட்டை அருகே குடியிருப்பு பகுதிக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பரபரப்பு!

ஜோலார்பேட்டை அருகே மூன்று ஏறி உடைந்து குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது குடியிருப்பு வாசிகள் அவதி

Update: 2024-12-04 08:16 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள 3 ஏரிகள் நிரம்பியதன் காரணமாக நந்தினி நகர் குடியிருப்பு பகுதியில் புகுந்த மழைநீர் கால்வாய் அமைத்து தர கோரிக்கை! ஃபெஞ்சல் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்த கனமழை மற்றும் லேசான மழையின் காரணமாக ஜோலார்பேட்டை பகுதிகளில் உள்ள ஏலகிரிஏரி, பால்நாங்குப்பம் ஏரி, வெங்காயப்பள்ளி ஏரி, ஆகிய மூன்று ஏரிகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த நந்தினி குடியிருப்பு பகுதியில் சுமார் 25 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்த நிலையில் அந்த மூன்று ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் இந்த குடியிருப்பு பகுதிகளில் நுழைந்தும் அதேபோல சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் அப்பகுதி மக்கள் அந்த சாலையில் பயணிக்க முடியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக இந்த மூன்று ஏரிகளின் உபரி நீர் வெளியேறும் வகையில் கால் வகையை தூர்வாரி மற்ற ஏரிக்கு செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் எனவும் அதேபோல நந்தினி நகர் பகுதிக்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். பேட்டி 1) சாந்தி (2) பிராந்தா குடியிருப்பு வாசிகள்

Similar News