தஞ்சை திருக்கானூர் பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர், நேற்று தனது பைக்கில் கிள்ளுக்கோட்டை சென்றவர் மீண்டும் தனது வீட்டுக்கு சென்றபோது, உலகத்தான்பட்டி கிளைச்சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். பின்னர், தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.