விராலிமலை அருகே புனித சவேரியார் தேர்த்திருவிழா!

நிகழ்வுகள்

Update: 2024-12-04 07:42 GMT
விராலிமலை அருகேயுள்ள பேராம்பூர் ஊராட்சிக்குள்பட்ட மலம்பட்டியில் உள்ள புனித சவேரியார் ஆலயத் தேர்திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. மேலும் 3 சப்பரங்களில் வீதியுலா நடைபெற்றது. நேற்று பங்குத்தந்தை இன்னாசிமுத்து தலைமையில் கூட்டுத்திருப்பலியும், தொடர்ந்து தேர்ப்பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News