மாத்தூர் சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் இளையராஜா (43) இவருக்கு நெடு நாளாக காசநோய் இருந்து வந்தது. கடந்த 2ஆம் தேதி மாலை 7:30 மணி அளவில் வீட்டிலேயே இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில் மண்டையூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.