பரமத்தி வேலூர்: மாநில அளவிலான செஸ் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

நாமக்கல்லில் பரமத்தி வேலூர் நடைபெற்ற கந்தசாமி கண்டார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் நாதன் செஸ் அகாடமி இணைந்து ஞாயிற்றுக்கிழமை அன்று மாநில அளவில் செஸ் போட்டியை நடத்தினார்கள்.

Update: 2024-12-04 06:21 GMT
கந்தசாமிக் கண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், நாதன் செஸ் அகாடமியும் இணைந்து ஞாயிற்றுக் கிழமை அன்று மாநில அளவில் செஸ் போட்டியை நடத்தினார்கள். இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் மற்றும் கோப்பைகளும் வழங்கினார்கள்.நம் அறநிலையத்தின் தலைவர் Dr.R.சோமசுந்தரம் ஐயா . பள்ளியின் செயலாளர் R.மாசிலாமணி ஐயா , அறநிலையத்தின் உறுப்பினர் S.T.N.மகேந்திரமணி , நாதன் செஸ் அகாடமியின் தலைவர் R.சிவராம கிருஷ்ணன் , பள்ளியின் நிர்வாக அலுவலர் J.ராகினி பள்ளியின் முதல்வர் வைஷ்ணவி கணேஷ்பிரகாஷ் , ஆசிரியர், ஆசிரியைகள் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் செஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்கள்.

Similar News