பன்னீர்பட்டியில் பெற்றோர்கள் காலமானதால், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்த இளைஞன்.
பன்னீர்பட்டியில் பெற்றோர்கள் காலமானதால், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்த இளைஞன்.
பன்னீர்பட்டியில் பெற்றோர்கள் காலமானதால், விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்த இளைஞன். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, போத்துராவுத்தன் பட்டி அருகே உள்ளது பன்னீர்பட்டி கிராமம். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மறைந்த செல்வம்- சித்ரா தம்பதிகளின் மகன் தீபக் வயது 21. கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு தீபக்கின் பெற்றோர்கள் திடீரென காலமாகி விட்டதால், அன்றைய தினத்திலிருந்து தனது பெற்றோர்கள் இறந்ததால் மன வருத்தத்தில் வாழ்ந்து வந்தார் தீபக். தனது தாத்தா வீடான சித்ராவின் தந்தை குழந்தைவேல் வீட்டில் வசித்து வந்த தீபக், டிசம்பர் 2ஆம் தேதி இரவு 10 மணி அளவில் பன்னீர்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் உள்ள குழந்தைவேலுனுடைய மாட்டு கொட்டகையில்,தீபக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் டிசம்பர் 3ஆம் தேதி காலையில் இந்த சம்பவத்தை பார்த்த குழந்தைவேல் இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உயிரிழந்த தீபத்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தோகைமலை காவல்துறையினர்.