கரூர்- மின்வாரிய பணியாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்- மின்வாரிய பணியாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-12-03 13:20 GMT
கரூர்- மின்வாரிய பணியாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய பணியாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கரூர் மின் வட்ட கிளை சார்பாக சிஓடிஇஇ, சிஐடியு சார்பில், கரூர் மின்வாரிய அலுவலகம் முன்பு, கிளைத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் கோபாலகிருஷ்ணன், மண்டல செயலாளர் தனபால், சிஐடியு மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட பொருளாளர் சரவணன், கிளை பொருளாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 2023 டிசம்பர் 1ம் தேதி முதல் மின்வாரிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்கிட வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் காணுகிற வரை,2023 டிசம்பர் 1-ம் தேதி முதல் இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,000- வழங்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Similar News