நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் பிறந்தநாள் விழா
நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் என். சி. ரவி கலந்துகொண்டு ராஜேந்திர பிரசாத் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் பிறந்தநாள் விழா நடைபெற்றது.நூலகர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். நூலக வாசகர் வட்ட தலைவர் டி.எம் மோகன் விழாவுக்கு தலைமை ஏற்றார். சிறப்பு விருந்தினராக கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் என். சி. ரவி கலந்துகொண்டு ராஜேந்திர பிரசாத் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சுரேஷ் பாலாஜி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்.இந்த நிகழ்வில் முகமது ரபி, ரவி, கண்ணன்,துரைசாமி, கிருஷ்ணகுமார், பாலுசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் இறுதியில் வாசகர் வட்ட பொருளாளர் அன்புச்செல்வன் நன்றி கூறினார்.