திருச்செங்கோட்டில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு துவக்கம்

திருச்செங்கோட்டில் வனத்துறை மூலம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு துவக்கம்

Update: 2024-11-25 08:33 GMT
தமிழ்நாடு பசுமையாக்க காலநிலை மாற்றம் திட்டத்தின் கீழ் திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் 800 மரக் கன்று களை நட தமிழ்நாடு வனத்துறை முடிவு செய்து திருச்செங்கோடு தெப்பக்குளம் கொல்லப்பட்டி பூங்கா, கொல்லப்பட்டி சிவன் கோவில், கூட்டப்பள்ளி நீர்த்தேக்க தொட்டி, அருகில் விளையாட்டு மைதானம், கூட்டப்பள்ளி பூங்கா உள்ளிட்ட பதினைந்து பகுதிகளில் மரக்கன்றுகளை நடத் திட்டமிடப் பட்டுள்ளது. இதன் துவக்க விழா நிகழ்ச்சி தெப்பக்குள கரையில் நடைபெற்றது. நாமக்கல் வன சரக அலுவலர்செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ராஜா கவுண்டம் பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி பின்புறம் உள்ள பகுதி,சைதன்யா பள்ளி வளாகம் ஆகியவற்றில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் அருள், பொறியாளர் சரவணன், நகரமைப்பு அலுவலர் ஸ்ரீதர், வனக்காவலர்கள் முத்துக்குமார், கோகுல பிரியா, நகர் மன்ற உறுப்பினர்கள் திவ்யா வெங்கடேஸ்வரன், புவனேஸ்வரி உலகநாதன், சண்முகவடிவு, புவனேஸ்வரி ரமேஷ்,சைதன்யா பள்ளி முதல்வர் அனிதா ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News