உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள சவரத் தொழிலாளர்கள் ஆணையாளரிடம் மனு
வரி விலக்கு அளிக்க கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் பல ஆண்டு காலமாக நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சலூன் கடைகள் (சவர தொழில்) நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே பெரிய கார்ப்பரேட் நிறுவன சலூன் கடைகள் (ஸ்பா ) அதிகளவு வைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் பெரிய கார்ப்பரேட் நிறுவன சலூன் கடைகளுக்கு லைசென்ஸ் மற்றும் வரி கட்ட வேண்டும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் காலம் காலமாக மருத்துவர் மற்றும் நாவிதர் என்ற சமூகத்தால் இந்த சவரத் தொழிலை குலத்தொழிலாக செய்து வருகின்றோம். மேலும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் சலூன் கடைகள் பெருகிவிட்ட காரணத்தால் சவரத் துறையில் நழுவடைந்துவிட்ட நிலையில் வாடகை கொடுப்பதற்கும் மிகவும் சிரமமாக உள்ள சூழ்நிலையில் குடும்பம் நடத்தி வருகின்றோம்.மேலும் மாற்று இனத்தவரும் தொழிலை செய்து வருகின்றனர். எனவே நகராட்சி அறிவித்து இருக்கும் அறிவிப்பில் இருந்து சலூன் கடைகளுக்கு விலக்கு அளித்து எங்களது தொழிலையும் குடும்பத்தையும் காக்குமாறு அனைத்து மருத்துவ முன்னேற்ற கழகம் மற்றும் உடுமலை நகர சவரத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நகராட்சி ஆணையாளரிடம் இன்று மனு அளித்தனர்