கரூரில், அசையா சொத்து ஏலம் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
கரூரில், அசையா சொத்து ஏலம் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
கரூரில், அசையா சொத்து ஏலம் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் என்று செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,ஈரோடு,விக்னேஸ்வரா பைனான்ஸ் கார்ப்பரேசன், நிதி நிறுவனத்திற்கு சொந்தமான அசையா சொத்தான கரூர் மாவட்டம், கரூர் வட்டம், மூக்கணாங்குறிச்சி கிராம புலஎண்.15/சி1, 16/2-ல் அமைந்துள்ள 3108 ச.அ பரப்பளவுள்ள காலி இடத்தினை 29.11.2024 ஆம் தேதி முற்பகல் 11.30 மணியளவில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், கரூர் அவர்களால் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஏலம் கோர விரும்பும் நபர்கள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர், கரூர் என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பெறப்பட்ட ரூ.25,000/-க்கான வங்கி வரைவோலையினை (Demand Draft) சமர்ப்பிக்க வேண்டும். மேலும், அசையா சொத்து மற்றும் ஏல நிபந்தனைகள் விவரங்களை கரூர் மாவட்ட இணையதளத்தில் (www.karur.nic.in) காணலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.