மொஞ்சனூரில் வயிற்று வலியால் அவதிப்பட்ட கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.

மொஞ்சனூரில் வயிற்று வலியால் அவதிப்பட்ட கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.

Update: 2024-12-05 08:53 GMT
மொஞ்சனூரில் வயிற்று வலியால் அவதிப்பட்ட கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, மொஞ்சனூர் அருகே உள்ள பூண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் மணிகண்டன் வயது 32. இவர் மொஞ்சனூர் பகுதியில் உள்ள ராய வேலன் என்பவருடைய தோட்டத்தில் கடந்த 10- வருடங்களாக தொடர்ந்து அங்கேயே தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், அண்மைக்காலமாக மது போதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். இதனால் அவருக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டிசம்பர் 4-ம் தேதி மதியம் 12.30 மணி அளவில், வயிற்று வலி தாங்க முடியாததால், தோட்டத்தில் தங்கியிருந்த அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் என்ற விவசாயி, சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த மணிகண்டனின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தென்னிலை காவல் துறையினர்.

Similar News