யூரியா நீர் குடித்து 6 மாடுகள் உயிரிழப்பு
கூத்தப்பாடி கிராமம் ராஜேரி செல்லும் வழியில் அடையாளம் தெரியாத நபர்கள் தண்ணீரில் யூரியா கலந்து வைத்ததில் தாகத்திற்கு தண்ணீர் குடித்த ஆறு நாட்டு மாடுகள் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் கூத்தப்பாடி அருகே வனப்பகுதி உள்ளது இங்கு ஆண்டு காலமாக நாட்டு மாடுகள் வளர்த்து வருகின்றனர். இந்த மாடுகளை விவசாய பயன்பாட்டில் பல்வேறு உழவுத் தொழில் செய்வார்கள். அதேபோல் இங்கு உள்ள நாட்டு மாடுகளை உணவு பயன்பாட்டிற்காக வெளி மாவட்டங்களுக்கு வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுவார்கள். கூத்தப்பாடி குள்ளத்திரம் கிராமங்களில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகள். அந்த மாடுகளே அருகில் உள்ள வனப் பகுதிக்கு மேச்சலுக்குச் சென்று மேய்ச்சலை முடித்துவிட்டு அதுவே வீட்டிற்கு வந்து விடும். இது பல நூறு ஆண்டுகளாக இப்படித்தான் நடைமுறை. அதேபோல் வழக்கம் போல நேற்று செவ்வாய்க்கிழமை காலை நாட்டு மாடுகள் கூத்தப்பாடி கிராமத்தில் இருந்து வனப்பகுதிக்கு மேச்சலுக்குச் சென்றது மேல்சலை முடித்துவிட்டு மாலைப்பொழுதில் வீடு திரும்பும் பொழுது அடையாளம் தெரியாத நபர்கள் விவசாய நிலங்களில் யூரியா கடந்த தண்ணீரை வேண்டுமென்றே வைத்துள்ளனர். இதனால் தாகத்தில் வந்த நாட்டு மாடுகள் அந்த யூரியா கடந்த தண்ணீரை குடித்துள்ளது. குடித்த குறிப்பிட்ட மணி நேரத்துக்குள் ஆறு மாடுகள் துடிதுடிக்க ஆங்காங்கே விவசாய நிலங்களில் செத்து கிடந்தது. மாட்டிற்கு சொந்தக்காரர்கள் உடனடியாக ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் செத்துக் கிடந்த நாட்டு மாடுகளை பார்வையிட்டு நாட்டு மாட்டினுடைய உரிமையாளர்களை ஒகேனக்கல் காவல் நிலையத்திற்கு வந்து புகார் மனு அழியுங்கள் என்று தகவல் தெரிவித்து சென்றனர். நாட்டு மாடு வளர்ப்போர் கூறுகையில் ஏற்கனவே இது போன்ற மாடுகள் யூரியா மூலம் கொல்லப்படுகிறது ஒகேனக்கல் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். யூரியா கலந்த தண்ணீர் வைத்து கொள்ளும் நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கின்றனர்.